வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:25 IST)

என்ன இவரும் இதையே சொல்கிறார்… உலகக் கோப்பை பற்றி சேவாக் கணிப்பு!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் தற்போது கிரிக்கெட் சம்மந்தமான பல சுவாரஸ்யமான தகவல்களை பேசி வருகிறார். தனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் அவர் இந்திய அணியையும் இந்திய அணி வீரர்களையும் கூட கடுமையாக விமர்சிக்கிறார்.

இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை பற்றி பேசியுள்ள அவர் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளைக் கூறியுள்ளார். அதில் “இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள்தான் இந்த முறை அரையிறுதிக்கு செல்லும் எனக் கூறினார். பல முன்னாள் வீரர்களும் இந்த நான்கு அணிகளைதான் குறிப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.