திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (18:24 IST)

தென்னாப்பிரிக்க தொடர்: இந்திய வீரர்களுக்கு சேவாக் ஆலோசனை!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
 
72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிடிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி எப்படி விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
 
தொலைக்காட்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய சேவாக், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளைத் தொடாமல் இருக்க வேண்டும், ஸ்ட்ரெய்டாக ஆட முயற்சிக்க வேண்டும். மேலும் அதிரடியாக விளையாட ஸ்ட்ரெய்ட் மற்றும் பிளிக் ஷாட்களையே தேர்வு செய்ய வேண்டும். ஷார்ட் பிச் பந்துகள் ஆக்ரோஷமாக வரும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
 
தென்னாப்பிரிக்க பிட்சுகளில் பந்துகள் பவுன்சராக வரும். இதனால் போல்ட் ஆவது கடினம். இதனை நேர்மறையாக எடுத்துக்கொண்டு ஒரு ஓவருக்கு குறைந்தது 3 ரன்களாவது எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.