1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (09:43 IST)

நான் எதை தவறவிட்டேன்… இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து சச்சின் ஜாலி ட்வீட்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இரு அணிகளும் விக்கெட்களை மளமளவென இழந்து தடுமாறி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய பந்துவீச்சில் சுருண்டது.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் கோலி 46 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் மளமளவென விக்கெட்கள் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் மீண்டும் தென்னாப்பிரிக்க அணி பேட் செய்ய வந்து 62 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்தது. இப்படி ஒரே நாளில் 23 விக்கெட்கள் விழுந்தன.

இந்நிலையில் இந்த முதல் நாள் ஆட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள சச்சின் “நான் விமானத்தில் ஏறும் போது தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. அதன் பின்னர் நான் விமானத்தில் இருந்து இறங்கும் போது அவர்கள் 3 விக்கெட்டில் இருந்தார்கள். இடையில் நான் எதை தவறவிட்டேன் என சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.