வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : சனி, 5 ஜூலை 2014 (12:26 IST)

சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்னேவும் மோதும் காட்சி கிரிக்கெட்: வெல்வது யார்?

கிரிக்கெட்டில் உலகில் பழமையும், பாரம்பரியமும் கொண்ட புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானம் 1814 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் அந்த மைதானத்தை நிர்வகித்து வரும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), உலக லெவன் அணிக்கும் இடையே 50 ஓவர் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


 
இந்த ஆட்டம் இன்று நடக்கிறது. எம்.சி.சி. அணிக்கு ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும், உலக லெவன் அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்பு சர்வதேச களத்தில் எதிரிகளாக பாவிக்கப்பட்ட இருவரும் ஓய்வுக்கு பிறகும் களத்தில் கோதாவில் குதிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணியிலும் முன்னாள், இந்நாள் வீரர்கள் கலந்து இடம் பெற்றுள்ளனர். 
 
அதன் விவரம் வருமாறு:- எம்.சி.சி. அணி: சச்சின் தெண்டுல்கர் (கேப்டன்), ராகுல் டிராவிட், ஆரோன் பிஞ்ச், சயீத் அஜ்மல், உமர்குல், கிறிஸ் ரீட், பிரையன் லாரா, டேனியல் வெட்டோரி, பிரெட்லீ, சந்தர்பால், ஷான் டெய்ட். 
 
உலக லெவன் அணி: ஷேன் வார்னே (கேப்டன்), கெவின் பீட்டர்சன், அப்ரிடி, டினோ பெஸ்ட், முரளிதரன், பீட்டர் சிடில், ஷேவாக், யுவராஜ்சிங், தமிம் இக்பால், ஆடம் கில்கிறிஸ்ட், பால் காலிங்வுட். போட்டிக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.1024, சிறியவர்களுக்கு ரூ.512 ஆகும். 
 
எந்த கேலரியிலும் அமர்ந்து பார்க்கலாம். பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.