1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 22 அக்டோபர் 2014 (18:43 IST)

கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
 
நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்க இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டம் மவுண்ட் மாங்கானு மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 230 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 
 
நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் லுக் ரோஞ்சி–டிரென்ட் பவுல்ட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 74 ரன்கள் திரட்டியது. இதில் தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டீ காக் 5 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் செய்து அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
 
இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பேரை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சமன் செய்தார். 
 
பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் கேப்டன் டிவில்லியர்ஸ் 89 ரன்கள், டுமினி 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.