காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.
முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பிரிஸ்பேனில் நடக்கும் அடுத்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி குறித்து பேசியுள்ள ஷுப்மன் கில் “காபா மைதானம் குறித்து நாங்கள் பயப்படப் போவதில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த மைதானத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம். இந்த தலைமுறை வீரர்கள் பந்தை யார் வீசுகிறார்கள் என்றெல்லாம் பார்த்து பயந்து விளையாடுவதில்லை” எனக் கூறியுள்ளார்.