வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (07:44 IST)

கடைசியாக இப்படி எப்போது நடந்தது என்றே தெரியவில்லை… வெற்றிக்குப் பின் ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா மூன்று முறை பேட் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “கடைசியாக எப்போது இரண்டு சூப்பர் ஓவர் போட்டி நடந்தது என்பதே நினைவில் இல்லை. இந்த போட்டியில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதில் கவனமாக இருந்தோம்.

இந்த போட்டி சிறப்பாக அமைந்தாலும், எங்களுக்கு அழுத்தம் இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த தொடர்களில் ரின்கு சிங் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார். எந்த பதற்றமும் இல்லாத அவரைப் போன்ற ஒருவர் பின் வரிசையில் தேவை. ஐபிஎல் தொடரில் அவர் செய்ததை இந்திய அணிக்காகவும் செய்வார் என்று தெரியும்” எனக் கூறியுள்ளார்.