வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (07:30 IST)

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்… ஹிட்மேன் படைத்த மற்றொரு சாதனை!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை போட்டியில் 63 பந்துகளில் சதமடித்து அசத்தினார். உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கபில் தேவ்விடம் இருந்து பெற்றுள்ளார்.

அவர் 84 பந்துகளில் 131 ரன்கள் அடித்து ரஷீத் கான் பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார். இந்த இன்னிங்ஸ் மூலமாக அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

நேற்றைய போட்டியில் அவர் 5 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லை அவர் முந்தியுள்ளார். தற்போது விளையாடும் வீரர்கள் ரோஹித் ஷர்மாவுக்கு அருகில் கூட எந்த வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.