தோனி பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடிய ரிஷப் பண்ட்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 42 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், அவரோடு விளையாடிய சக வீரர்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.
சில இடங்களில் ரசிகர்கள் தோனிக்கு பிரம்மாண்டமான கட் அவுட்களை வைத்து வாழ்த்துகளை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் நேற்று தோனியின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடினார்.
தோனிக்காக தானே கேக் வெட்டி கொண்டாடிய பண்ட் “தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் என்னுடன் இல்லாததால் நானே உங்களுக்காக கேக் வெட்டுகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் செய்தவைகளுக்கு மிகவும் நன்றி.” என்று புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.