புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:38 IST)

கோலியின் முரட்டு செயலைக் கண்டித்த நடுநர்…

இந்திய கிரிக்கெட்  அணியின் ஒப்பந்தப்பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ஏ+ அணியின் கேப்டனாகத் தொடர ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் விராட் கோலி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

தற்போது நடப்பு ஐபிஎல்-2021 14வது சீசனிலும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி அதற்காக கண்டிக்கப்பட்டுள்ளார். சன்ரைஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 33 ரன்களில் அவுட்டாகி அவர் வெளியேறினார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த விளம்பர குஷனை உதைத்து, நாற்காலியை கோபத்தை பேட்டால் அடித்தார். இந்த வீடியோ வெளிஒயாகி அவர் விதிமீறலில் ஈடுபட்டதாக நடுவர் நாராயணனால் புகார் தெரிவித்தார். இது ஆரம்பக்கட்ட தவறு என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை