திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (15:00 IST)

தோனி எப்பவுமே “ஃபினிஷர்” தான்..ரெய்னா புகழாரம்

தோனி இப்பொழுதும் பெஸ்ட் ஃபினிஷர் தான் என புகழந்து கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். ஆனால் அவரது ஆட்டம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் தான் ஆட தயாராக இருப்பதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ”நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தற்போது நான் இறங்கி விளையாட தயாராக இருக்கிறேன். ரிஷப் பண்ட் விளையாடுகையில் குழப்பமடைந்து வருகிறார்” என்று கூறுகிறார்.

மேலும், கிரிக்கெட் ஒரு மனரீதியான விளையாட்டு, அதில் தோனி சரியான உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆட்டத்தை சரியாக எப்போதும் முடிப்பதில் அவர் மிக சிறந்த ஃபினிஷர் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.