செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2022 (08:44 IST)

தொடர் தோல்வி எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை இழக்கும் ரமிஸ் ராஜா?

ஒரு வருடத்துக்குள்ளாகவே ரமீஸ் ராஜாவை பதவியை விட்டு நீக்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததன் பின்னணியில் இந்த தகவல்கள் வந்துள்ளன. செவ்வாயன்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அவரின் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் அப்போது மூன்று ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு இருந்தது.