திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (19:07 IST)

முதல் வெற்றியை ருசிக்குமா மும்பை இந்தியன்ஸ… ராஜஸ்தான் ராயல்ஸுடன் பலப் பரீட்சை- டாஸ் அப்டேட்!

இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்று ராஜநடை போட்டு வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி
இஷான் கிஷன்(w), ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(c), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்