வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (10:51 IST)

ரிஷப் பண்ட் யுவ்ராஜ் போல ஆதிக்கம் செலுத்தும் வீரர்! பாராட்டிய மூத்த வீரர்!

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் யுவ்ராஜ் போல போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்கிறார் என ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட ரிஷப் பண்ட் அடுத்து தோனியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் தனது மோசமான பார்மால் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனாலும் இன்னும் அவர் மேலான நம்பிக்கை மீதமுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள, கிரிக்கெட் வீரர்கள் சக கிரிக்கெட் வீரர்களோடு இன்ஸ்டாகிராமில் உரையாடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா இன்ஸ்டாகிராமில் சக இந்திய வீரர் சகாலுடன் உரையாடிய ரெய்னா ’ ரிஷப் பன்ட் மிகத் திறமையான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ், சேவக் போல போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவார். 'பிளிக் ஷாட்' அடிக்கும் போது டிராவிட் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.