வியாழன், 16 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2024 (09:52 IST)

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று சிறப்பாக விளையாடிய ஆஸி ரன்களை அதிரடியாக சேர்த்தது.

இதையடுத்து தற்போது தங்கள் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்களை இழந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கில் மற்றும் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.

தற்போது களத்தில் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வரும் நிலையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டுள்ளது. தற்போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 39 ரன்கள் சேர்த்து 406 ரன்கள் பின்தங்கியுள்ளது.