வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2017 (18:41 IST)

டாக்டர் பட்டம் எனக்கு வேண்டாம் - நிராகரித்த ராகுல் டிராவிட்

பெங்களூர் பலகலைக்கழகம் அளிக்க முன் வந்த டாக்டர் பட்டத்தை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ஏற்க மறுத்து விட்டார்.


 

 
1996ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர் ராகுல் டிராவிட். தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் பலமுறை, இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றி ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இவரை இந்திய அணியின் தடுப்புசுவர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.
 
இவர் 2012ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
 
இந்நிலையில், கிரிக்கெட் துறையில் அவர் செய்த சாதனையை போற்றும் வகையில், பெங்களூர் பலகலைக்கழகம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை அளிக்க முன் வந்தது. ஆனால், டிராவிட் அதை ஏற்க மறுத்துவிட்டார். கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக ஏராளாமான ஆராய்ச்சிகளை நான் செய்ய வேண்டியுள்ளது. அவைகளை முடித்த பின் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.