Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புஜாரா சதத்தால் முன்னேறும் இந்தியா


Abimukatheesh| Last Updated: சனி, 18 மார்ச் 2017 (18:48 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைப்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி  6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது.

 

 
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 451 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 
 
பின்னர் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. 
 
இன்று முரளி விஜய் - புஜாரா ஜோடி ஆட்டத்தை துவங்கியது. முரளி விஜய் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த ராஹானே மற்றும் கருண் நாயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
மூன்றாவது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி  6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், சாஹா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் பின்தங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :