1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (12:46 IST)

போட்டிகள் தொடங்கும் முன்பே 8 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களுக்கு, பாதுகாப்பு விதி முறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை (14-02-15) முதல் 11ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால், பங்கேற்கவுள்ள 14 அணிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.

 
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேரும் இரவில் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு 45 நிமிட நேரம் தாமதமாக ஓய்வறைக்குத் திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அவர்கள் மீண்டும் இதே போன்று விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஒழுக்க விதிமுறைகளை மிறியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதோடு தாங்கள் அதே மாதிரியான தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

பாகிஸ்தான் தனது பயிற்சி ஆட்டம் இரண்டிலும் (பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரும் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை அடிலெய்டில் எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரடி, “இந்த முறை நாங்கள் வரலாற்றை மாற்றுவோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.