அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக்… உலக சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!
பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.
அதன் பின்னர் நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை தொடரையும் அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் அவர் ஆஸி அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவர் உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். வங்கதேச அணிக்கெதிராக ஹாட்ரிக் அடித்த அவர் மீண்டும் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஹாட்ரிக் எடுத்துள்ளார்.