வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (10:10 IST)

இந்தியா vs ஆஸ்திரேலியா… நான்காவது டெஸ்ட்டுக்கும் ஸ்டீவ் ஸ்மித்தான் கேப்டனா?

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருந்த ஆஸி அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இப்போது 2-1 என்ற நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமானது. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் ஆஸிக்கு திரும்பியதால் மூன்றாவது டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

பால் டேம்பரிங் குற்றத்துக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது மீண்டும் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேட் கம்மின்ஸ் நான்காவது போட்டிக்கும் திரும்ப மாட்டார் எனும் நிலையில், அடுத்த போட்டிக்கும் ஸ்டீவ் ஸ்மித்தான் கேப்டனாக செயல்பட உள்ளார் என சொல்லப்படுகிறது.