காயத்தில் இருந்து மீண்ட ஷாகீன் அப்ரிடி.. டி 20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
அக்டோபர் மாதம் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.
அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன.
இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான்.