மயிரிழையில் மகத்தான சாதனையை தவறவிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 8 ஜனவரி 2017 (18:07 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை 23 ரன்களில் தவறவிட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில், 220 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

இதில், முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் போட்டிகளில் அவர் குவித்த ரன்களின் எண்ணிக்கை 9,964 ஆக உயர்ந்தது. இந்நிலையில், மேற்கொண்டு 36 ஓட்டங்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்களைக் கடந்திருப்பார்.

இது தவிர 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் யூனிஸ் கான் பெற்றிருப்பார். ஆனால் அவர் 13 ரன்களில் அதிர்ச்சி அளித்தார். இதனால், மகத்தான சாதனையை யூனிஸ் கான் தவறவிட்டார்.

யூனிஸ் கான் 10 ஆயிரம் ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 23 ரன்களே தேவை. ஆனால், ஏற்கனவே அவர் இத்தொடர் முடிந்தவுடன் தனது ஓய்வு குறித்து அறிவிப்பார் என்ற நிலையில், மேலும் சில போட்டிகளில் விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :