செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (17:01 IST)

பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பணிந்தது ஆஸ்திரேலியா –வெற்றியை நோக்கி பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பாக பகார் ஸ்மான் 94 ரன்களும் கேப்டன் சர்பரஸ் அகமது 94 ரன்களும் அதிகளவில் சேர்த்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக் லயான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியின் பிஞ்ச் (39) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (34) மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் அந்த 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முகமது அப்பாஸ் 5 விக்கெட்களும் சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிஃப் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 137 ரன்கள் முன்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி. சற்று முன் வரை அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் சேர்த்துள்ளது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பகார் ஸமான் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.