1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:31 IST)

இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் இருந்து மாற்றம்.. பணிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியைத் தன்பக்கம் சாய்த்தது. இதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அதே போல இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானுக்கு வெளியே நடக்கும் என்றும் , அவ்வாறு தகுதி பெறாத பட்சத்தில் பாகிஸ்தானிலேயே நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.