Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் கேப்டன் ஆனார் 'தல' தோனி. ரசிகர்கள் மகிழ்ச்சி

captain dhoni" width="600" />
sivalingam| Last Updated: திங்கள், 27 மார்ச் 2017 (16:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று அழைக்கப்படும் தோனி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகள் ஆகியவற்றின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் அவர் கேப்டனாக நீடிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்பட்டார்.புனே அணியில் இருந்து கேப்டனாக தோனி நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டன் அசாரூதின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்  மாநில அணிகளுக்கு இடையில் நடைபெறும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக டோனி தேர்வு பெற்றுள்ளார்.

பிப்ரவரி 25-ந்தேதி முதல் தொடங்கும் மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி தொடருக்கான ஜார்கண்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இதில் தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் கிரிக்கெட் வாரியம் டோனியை கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் தல தோனியின் ரசிகர்கள் மீண்டும் அவர் கேப்டனாகியுள்ளது குறித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :