1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (13:04 IST)

பாகிஸ்தானுக்கு எதிராக வாள் வீசும் கம்பிர்: விளையாட்டை விட இந்தியர்களின் உயிர் முக்கியம்

விளையாட்டை விட இந்தியர்களின் உயிர் முக்கியமானது என்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்த கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கம்பிர், ”எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளும் வரை அந்நாட்டுடன் எந்த பிணைப்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன். ஏனென்றால், மக்கள் தங்களது குழந்தைகளை, தந்தையை, கணவனை இழந்து நிற்பதை நான் உணர்கிறேன்.
 
நான் குளிரறையில் அமர்ந்து கொண்டு நாம் விளையாடக் கூடாது என்றோ, கிரிக்கெட்டை அரசியலுடன் ஒப்பு நோக்கக்கூடாது என்றோ, நாம் அரசியலையும், பாலிவுட்டையும் ஒப்பு நோக்கக்கூடாது என்றோ பேச முடியும். ஆனால், மக்கள் அவர்களின் அன்பானவர்களை இழப்பதை தெளிவாகவே உணருகிறேன்.
 
விளையாட்டை விட இந்தியர்களின் உயிர் முக்கியமானது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் முழுதும் ஆமோதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.