வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (19:15 IST)

5 விக்கெட்டுக்களை இழந்தது நியூசிலாந்து: மழை இல்லையென்றால் வெற்றி கிடைத்திருக்குமோ?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது
 
கடந்த 18ஆம் தேதி ஆரம்பித்த இந்த போட்டியின் முதல் நாளில் டாஸ் கூட போடப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் மட்டும் போட்டி நடந்த நிலையில் நான்காம் நாள் மீண்டும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று ஐந்தாம் நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா தனது முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்துள்ளது என்றும் இதனை அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் சற்று முன் வரை அந்த அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் வில்லியம்சன் 24 ரன்களுடன் களத்தில் உள்ளார்
 
இந்த போட்டியை டிரா என உறுதி செய்யப்பட்டாலும் போட்டி மழையில்லாமல் நடந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றே கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது