வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:35 IST)

துலீப் கோப்பைக் கிரிக்கெட்டில் கலக்கும் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான்… அவசரத்தால் மிஸ்ஸான இரட்டை சத வாய்ப்பு!

நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் விளையாடி கவனம் ஈர்த்த சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் விரைவில் இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அவர் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பி அணிக்காக விளையாடி வருகிறார். 19 வயதாகும் அவர் இந்த போட்டியில் 181 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் குல்தீப் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.

முன்னதாக 105 ரன்களோடு முதல் நாள் போட்டியை முடித்த அவர் இரண்டாம் நாளில் அதிரடியாக விளையாடினார். எட்டாவது விக்கெட்டுக்கு நவ்தீப் சைனியோடு இணைந்து ஆடிய அவர்கள் கூட்டணி  205 ரன்கள் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.