ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (19:08 IST)

தினேஷ் கார்த்திக்கை பாராட்ட மறந்த முரளி விஜய்: ரசிகர்கள் கொதிப்பு

தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை பாராட்ட மறந்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யை ரசிகர்கள் வறுத்தெடுக்க துவங்கியுள்ளனர்.

 
 
சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அவரை சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பாராட்டினர்.
 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 
 
“கவனிக்கத்தக்க பெருமைக்குரிய வெற்றி, என்ன வகையான கிரிக்கெட்டை நாம் ஆடிவருகிறோமோ அதனை மாதிரியாகக் கொண்டது” என்று வாழ்த்து தெரிவித்தார்.
 
இந்த பதிவில் அவர் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த தினேஷ் கார்த்திக்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் முரளி விஜய் மீது கோபமடைந்துள்ளனர்.