திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:03 IST)

அணியில் எந்த மாற்றமும் பண்ணலை.. ஆனாலும்..! – தோனி பெருமிதம்!

நேற்றய ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற நிலையில் அணியின் பலம் குறித்து கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் விமரிசையாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. முதலாவதாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே 19வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.

கடந்த ஆண்டில் மோசமான நிலையில் இருந்த சிஎஸ்கே இந்த தொடரில் 6 ஆட்டங்களில் 5ல் வெற்றிப்பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் தோனி ”எங்கள் பேட்டிங் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சு மோசமாக இல்லாவிட்டாலும் பிட்ச் சாதகமாக இருந்தது. எங்கள் அணியில் கடந்த 8 – 10 வருடங்களாக எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் வீரர்களின் பலம், பலவீனம் போன்றவற்றை கணிக்க முடிகிறது” என கூறியுள்ளார்.