Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மைதானத்துக்கு வெளியே பந்தை பறக்க விட்ட தோனி: 110 மீட்டர் சிக்ஸர் விளாசல் (வீடியோ இணைப்பு)

மைதானத்துக்கு வெளியே பந்தை பறக்க விட்ட தோனி: 110 மீட்டர் சிக்ஸர் விளாசல் (வீடியோ இணைப்பு)

திங்கள், 17 ஏப்ரல் 2017 (10:48 IST)

Widgets Magazine

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடப்பு ஐபில் கிரிக்கெட் தொடரில் புனே அணிக்காக விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் இந்த சீசனில் அதிக தூரத்தில் அடிக்கப்பட்ட சிக்ஸராக பார்க்கப்படுகிறது.


 
 
ராஜஸ்தான், சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டதை அடுத்து அந்த அணியின் வீரர்கள் குஜராஜ், புனே அணிக்கு ஏலம் விடப்பட்டு சென்றனர். சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி புனே அணிக்கு சென்றார்.
 
கடந்த சீசனில் புனே அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு பதிலாக இந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் உள்ளார். ஆனால் தொடர்ந்து தோனி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பலரின் விமர்சனத்துக்கு உள்ளானார்.
 
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் ரன் எடுக்க தடுமாறி வரும் வேளையில் தோனி மட்டும் அதிகமாக குறிவைத்து விமர்சிக்கப்பட்டார். புனே அணியின் உரிமையாளர் கூட தோனியை விமர்சிக்க தவறவில்லை. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியும் தோனி இருபது ஓவர் போட்டிக்கு தகுதியான நபர் இல்லை என கூறினார்.
 
ஆனால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று தோனி சிறப்பாக ஆடினார். பெரிதாக ரன் குவிக்கவில்லை என்றாலும் நேற்று நம்பிக்கை தரும் விதமாக 25 பந்துகளில் 28 ரன் எடுத்து எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார்.

 

 
 
இதில் தோனி மூன்று பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசினார். தோனி அடித்த அந்த சிக்ஸர் நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தூரம் கொண்ட சிக்ஸர் என பேசப்படுகிறது. பெங்களூர் அணியின் சாகல் வீசிய அந்த பந்தை அபாரமாக அடித்த தோனி அதனை மைதானத்தின் வெளியே மேற்கூரைக்கு பறக்கவிட்டார். இந்த சிக்ஸர் 110 மீட்டர் இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும் சிக்ஸர் தூரம் குறித்து இன்னமும் உறுதி செய்யப்பட்ட தகவல் தெரியவில்லை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஐ.பி.எல். தொடர்: கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ...

news

ஐ.பி.எல் தொடர்: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ...

news

கோலி இஸ் பேக்: பலம் பெருகுமா பெங்களுர் அணிக்கு?

கோலிக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் ...

news

எளிதான இலக்கை கொடுத்த ஹைதராபாத்; வெற்றி பெறுமா மும்பை?

ஹைதராபாத் - மும்பை அணிகள் இடையிலான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ...

Widgets Magazine Widgets Magazine