வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:11 IST)

வலிமை அப்டேட் கேட்டத மறக்கவே மாட்டேன்! – மனம் திறந்த மொயீன் அலி!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மொயில் அலி தன்னிடம் வலிமை அப்டேட் கேட்டது மறக்க முடியாதது என கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக வலம் வருபவர் மொயீன் அலி. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மொயீன் அலி விளையாடி வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மொயீன் அலி அறிவித்தார்.

இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து மொயீன் அலி பேசியுள்ள வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் பல நினைவுகளை பகிர்ந்த மொயீன் அலி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடந்தபோது அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவத்தை குறிப்பிட்டு அது மறக்க முடியாத அனுபவம் என கூறியுள்ளார்.