1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:46 IST)

எனது தலையை வாட்சன் டாய்லெட்டுக்குள் அமுக்கினார்: மிட்செல் ஜான்சன்

ஷேன் வாட்சன் பயிற்சி அகாடமியில் இருந்தபோது டாய்லெட்டுக்குள் என் தலையை அமுக்கினார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
 

 
அவுஸ்திரேலியா அணியில் பிரட் லீ-க்கு பிறகு வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கியவர் மிட்செல் ஜான்சன். அதே நேரத்தில் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் ஷேன் வாட்சன். இருவரும் ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும், வாட்சனை விட ஜான்சன் ஐந்து மாதத்திற்கு இளையவர்.
 
இந்நிலையில், 2000ஆம் ஆண்டுகளில் இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டவர்கள். அப்போது இருவருக்கும் 19 வயது நடைபெற்றுக் கொண்டிருந்தது. அத்தகைய தருணத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மிட்சல் ஜான்சன் விளக்கியுள்ளார்.
 
இது குறித்து தனது சுயசரிதை புத்தகமான ரெசிலியண்ட் [Resilient] என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மிட்செல் ஜான்சன், ‘‘ஒவ்வொரு நாள் இரவும் பொதுவான அறைக்குள் கூடிவிடுவோம். பிரவு உணவிற்கு பின்னர் ‘நெய்பர்ஸ்’ நாடகத்தை தொலைக்காட்சியில் பார்ப்போம்.
 
நாங்கள் சிறிது நேரம் நாடகத்தினிடையே விளம்பரம் வரும்போது மல்யுத்தம் சண்டையிட நாங்கள் தயாராகி விடுவோம். விளம்பரம் முடியும் வரை இந்த சண்டை நடைபெறும். முடிந்ததும் திரும்பவும் தொலைக்காட்சியை பார்க்க வந்துவிடுவோம்.
 
அப்படி ஒருமுறை நாங்கள் சண்டையிடும்போது என்னை பாத் ரூமிற்குள் இழுத்துச் சென்றார்கள். சிலர் என் தலையை டாய்லெட்டிற்குள் அமுக்கினார்கள். நான் இதை விரும்பவில்லை. எனக்கு கோபம் தலைக்கேறியது.
 
எப்படியோ சமாளித்து ஒருவரின் சட்டையை பிடித்துக் கொண்டு எழுந்தேன். அந்த நேரத்தில் என்னையும் ஒருவர் பிடித்தார். நான் எனது வலது கரத்தை மேலே தூக்கி அடிக்க முயற்சி செய்தேன். அப்போது அவரும் வலது கரத்தை தூக்கி அடிக்க முயற்சி செய்தார். அப்புறம் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.
 
என்னை அடிக்க வந்தது வாட்சன் என தெரிந்தது. அப்போது நான் நினைத்துக் கொண்டேன்: நான் அவனை அடிக்கப் போவதில்லை. ஏனென்றால் அவன் என் சக வீரர்.
 
அந்த நேரத்தில் நான் கோபமாக இல்லை என்று என்னால் சொல்ல முடியாது. இதில் இருந்து மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது’’ என்று கூறியுள்ளார்.
 
இதை ஆமோதிக்கும் வகையில் மற்றொரு சக வீரரும், ’இது முற்றிலுமான உண்மை. அப்போது நானும் அங்கே இருந்தேன்’ என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.