புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (16:22 IST)

மயாங் அகர்வால் அசத்தல் சதம்..

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவிற்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை சேர்ந்த மயாங் அகர்வால் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவிற்கு இடையே நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா, 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய புஜாரா, 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே தொடர்ந்து அதிரடியாய் விளையாடிய மாயாங் அகர்வால் 195 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் மயாங் அகர்வால் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.