1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 27 மே 2015 (09:51 IST)

ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 41 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி லாகூரில் நேற்று அரங்கேறியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அணியில் ஹபீஸ் 86 ரன்கள், சோயப் மாலீக் 112 ரன்கள் என சிறப்பான பங்களிப்பை தந்தனர். அலி இறுதிவரை அவுட் ஆகாமல் 79 ரன்களை எடுத்திருந்தார்.
 
இறுதியில் பாகிஸ்தான் அணி  375 ரன்களை எடுத்தது. இடைத்தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எனினும் மசகட்சா மற்றும் சிகும்புரா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் இவர்களுக்கு பின் வந்த வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காததால் ஜிம்பாப்வே அணி வெறும் 334 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.