ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:30 IST)

மைதானத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு… LPL போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஜூலை 31, திங்கட்கிழமை அன்று தம்புள்ளை ஜெயண்ட்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான LPL கிரிக்கெட் போட்டியின் போது எதிர்பாராத பார்வையாளராக பாம்பு மைதானத்துக்குள் வந்தது  கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் முதன்மையான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான லங்கா பிரீமியர் லீக் (LPL) இன் ஒரு போட்டியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததால் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாம்பு அப்புறப்படுத்தப்பட்டு போட்டி தொடங்கியது.

இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகின்றன.