1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:59 IST)

வைரல் காய்ச்சல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து விலகும் வீரர்!

ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று முதல் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. மதியம் மூன்று மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போது பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.