செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:18 IST)

”ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவதாகத் தான் களமிறங்க வேண்டும்”.. கும்ப்ளே ஆர்டர்

வெஸ்ட் இண்டீஸுடனான ஒரு நாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை நான்காவது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் கோச் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் தொடர் சென்னையில் தொடங்குகிறது.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான அணில் கும்ப்ளே , ’வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவதாக இறக்கப்படுவார். மிகவும் சிறப்பான ஆட்டக்காரரான ஸ்ரேயாஸ் ஐயர், அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார்” என கூறியுள்ளார்.

மேலும் அவர், ஷிகார் தவான் போட்டியில் இல்லாததால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார், ஆகவே நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை தான் களமிறக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.