வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (15:38 IST)

சங்ககாரா புதிய சாதனை; முதல்தரப் போட்டிகளில் 19ஆயிரம் ரன்கள் குவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 

 
இலங்கை அணியின் ஜாம்பவான்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான குமார் சங்ககாரா கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், சாதனை படைப்பதில் இருந்து ஓய்வுபெறவில்லை.
 
சங்ககாரா முதல்தரப் போட்டிகளில் Central Province, Colombo District Cricket Association, Durham, Kandurata, Marylebone Cricket Club, Nondescripts Cricket Club மற்றும் Warwickshire ஆகிய அணிக்காக விளையாடியுள்ளார்.
 
நாட்டிங்ஹாம்சைர் அணிக்காக விளையாடிய பொழுது சங்ககாரா முதல்தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இடப்பிடித்தார். 246 போட்டிகளில் ஆடியுள்ள சங்கக்காரா மொத்தம் 19,011 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன் மூலம் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
முன்னதாக, முன்னாள் இலங்கை வீரர் ஜெஹன் மெண்டிஸ் 366 போட்டிகளில் 21,436 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக, இலங்கை சேர்ந்த ஜெயவர்த்தனே (17,843), திலன் சமர்வீரா (15,501), லாட்டி அவுட்ஸ்சோரன் (15,496) ஆகியோர் உள்ளனர்.