ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை பந்தாடியது கொல்கத்தா


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (23:49 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி ஒன்றில் கொல்கத்தா அணி டெல்லி அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது.


 


கொல்கத்தாவில் நடந்த இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் மோதியது. டாஸ் வென்று முதலில் கொல்கத்தா அணி பந்துவீசியது. இதனால் முதலில் களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. சாம்சன் 60 ரன்களும் எஸ்.எஸ்.ஐயர் 47 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பீர் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 71 ரன்களும், உத்தப்பா 33 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 9 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :