திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 மார்ச் 2018 (18:05 IST)

பாகிஸ்தான் பெண்ணை பார்க்க துபாய் சென்ற ஷமி? பிசிசிஐ வரை வந்த புகார்...

இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி மீது அவரது மனைவி வைத்த புகார் காரணமாக அவர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் கேள்விகுறியாக உள்ளது. 
 
ஷமியின் மனைவி புகார் அளித்ததாவது, பல்வேறு பெண்களுடன் ஷமிக்கு தொடர்புள்ளது. அவரும், அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப் படுத்துகின்றனர் என பல்வேறு புகார்களை அடுக்கினார். இதன் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
இந்நிலையில், ஷமி மனைவி அளித்த புகாரின்படி தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு துபாய் சென்ற ஷமி அங்கு பாகிஸ்தான் பெண் ஒருவரை சந்தித்தார் என்று கூறியுள்ளார், மேலும் ஷமி துபாயில் தங்கியிருந்தார் என்கிறார் அவரது மனைவி ஜஹான்.
 
இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஷமி எந்த வழியாக இந்தியா திரும்பினார், அவரது பயண விவரம் என்ன என்பதை கொல்கத்தா போலீஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுள்ளது.
 
தற்போது இந்த விஷயம் ஷமியின் தனிப்பட்ட வாழ்கையோடு கிரிக்கெட் வாழ்க்கையும் அழித்தது போல, பிசிசிஐ-க்கும் பிரச்சனையை கொண்டுவந்துள்ளது.