வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (10:21 IST)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் காயத்தால் விலகல்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

10 அணிகள் பங்கேற்கும் 6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

பிரதான சுற்றின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐதராபாத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் கொல்கத்தா அணியிலிருந்து மோர்னே மோர்கல், தோள்பட்டை காயம் காரணமாக போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவரால் சாம்பியன்ஸ் லீக போட்டிகளில் ஆட முடியாது என்று கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி  தெரிவித்துள்ளார்.

கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய இவர் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.