செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 மே 2022 (16:13 IST)

கலாய்த்த நபருக்கு கூலாக பதில் சொன்ன கோலி… இணையத்தில் வைரலான வீடியோ!

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது மோசமான ஆட்டத்திறனில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்கவில்லை. தொடர்ந்து சதங்களாக்க குவித்து ரன் மெஷின் என அழைக்கப்பட்ட அவர் இப்போது மோசமான பார்மில் இருக்கிறார். சமீபத்தைய இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்நிலையில் கோலி கடைசியா சதம் அடித்து 100 போட்டிகளைக் கடந்துவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அவர் கடந்த 100 இன்னிங்ஸ்களில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரிலும் 3 முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இந்நிலையில் RCB அணி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கோலியின் பேட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து பேட்டி எடுப்பவர் ஜாலியாக கலாய்த்துத் தள்ள, கோலியும் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு கூலாக பதில்களை சொல்லியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.