1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (08:09 IST)

விராட் கோலியிடம் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை… சுனில் கவாஸ்கர் ஆதரவு!

ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு வீரர் கிரிக்கெட்டின் முகமாக  இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் மற்றும் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக சாதனைகளைப் படைத்த வீரராக கோலி இருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

இந்நிலையில் கோலி குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “கோலியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நியுசிலாந்துக்கு எதிராக 70 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸை நான் பார்த்தேன். அவர் கால் வேலைகள் உள்ளிட்ட எல்லாமே நன்றாக இருந்தன. இப்போது அவருக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லை” என ஆதரவாகப் பேசியுள்ளார். வழ்ககமாக கவாஸ்கர் கோலியைக் கடுமையாக விமர்சிப்பவர் என்பது  குறிப்பிடத்தக்கது.