திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:02 IST)

சென்ச்சுரி போடாமல் சென்ச்சுரி போட்ட கோலி….ரன் மெஷினுக்கு வந்த சோதனை!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் உள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது மோசமான ஆட்டத்திறனில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்கவில்லை. தொடர்ந்து சதங்களாக்க குவித்து ரன் மெஷின் என அழைக்கப்பட்ட அவர் இப்போது மோசமான பார்மில் இருக்கிறார். சமீபத்தைய இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்நிலையில் கோலி கடைசியா சதம் அடித்து 100 போட்டிகளைக் கடந்துவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அவர் கடந்த 100 இன்னிங்ஸ்களில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.