1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக அசால்ட் வெற்றி… ப்ளே ஆஃப் செல்ல ஆயத்தமான கே கே ஆர்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அந்த அணி வீரர்கள் வரும் நடையைக் கட்டுவமதுமாக இருந்தனர். அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோரே பவுலரான குல்தீப் யாதவ் சேர்த்ததுதான். அவர் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்களை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. கே கே ஆர் சார்பாக வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த எளிய இலக்கை துரத்திய கே கே ஆர் அணி 17 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிகபட்சமாக 33 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றி மூலம் கே கே ஆர் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் மிக அருகில் சென்றுள்ளது.