செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:07 IST)

கிங் ஆப் த பேட்ஸ்மேன் கோலி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்...

ஐ.சி.சி  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் இந்திய பேட்ஸ்மேன்களில் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.
ஐந்து பத்தாண்டுகளுக்கு  முன்புவரை  ஆஸ்திரேலியா ,தென்னாப்ரிக்கா போன்ற  அணி வீரர்களே கிரிக்கெட்டில் வல்லாதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தெற்காசியாசியாவான இந்தியாவிலிருந்து தற்போது விராட் ,தவான் ,ரோஹித் ,பிரத்திவ் போன்ற வீரர்கள் தம் திறமையைக் காண்பித்து தரவரிசையிம் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்து வருகின்றனர்.
 
அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுகு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இதனால் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா ,ஆஸ்திரேலிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றன.
 
பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.
 
சர்வதேச அளவில் இந்திய அணியின் பெருமை கொடிகட்டி பறப்பதற்கு நம் இந்திய வீரர்களின் திறமையும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.