1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:50 IST)

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்டின் முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான கைரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலமாக கவனம் பெற்ற வீரர்களில் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கைரன் பொல்லார்ட் மிக முக்கியமானவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தலைமை ஏற்றும் வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். விரைவில் டி 20 உலகக்கோப்பை தொடர் வர உள்ள நிலையில் பொல்லார்டின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.