செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (09:12 IST)

எது ஆக்ரோஷமா விளையாட போறீங்களா? – கே எல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பேசிய அவர் “இங்கிலாந்து அணி போல நாங்களும் ஆக்ரோஷமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம்” எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கேலிகளை ஏற்படுத்தியுள்ளது. கே எல் ராகுல் சமீபகாலமாக மிகவும் மோசமான ஆட்டத்திறனில் இருக்கும் நிலையில் “முதலில் நீங்கள் டி 20 போட்டிகளிலாவது ஆக்ரோஷமாக விளையாடுங்கள்” என ட்ரோல் செய்து வருகின்றனர்.