Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டோனி ரசிகரை கலாய்த்த முன்னாள் இலங்கை கேப்டன்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (19:24 IST)
டோனி உலகின் அதிகவேக மனிதன் என கருதப்படும் உசைன் போல்ட் என்பவரை விட வேகமானவர் என்ற கருத்தை பதிவிட்ட ரசிகரை இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கேலி செய்துள்ளார்.

 

 
உலகின் வேகமான மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் கடைசியாக கலந்துக்கொண்ட ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் கேப்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் உசைன் போல்ட்டை எண்ணி பெருமைப்பட்டு கருத்து ஒன்றை பதிவிட்டார்.
 
அதற்கு பதில் அளிக்கும் விதமாக டோனி ரசிகர் ஒருவர், டோனி போல்ட்டை விட வேகமானவர் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஜெயவர்தனே கிண்டலாக, தோனி அவரது பைக்கில் இருந்தாரா? என்று பதில் டுவீட் செய்தார்.
 
உசைன் போல்ட்டை டோனியுடன் ஒப்பிடுவது மிக தவறான ஒன்று. அதுவும் டோனி ரசிகர் உசைன் போல்ட்டை விட டோனிதான் சிறந்தவர் என குறிப்பிடுவது மிகவும் தவறான பார்வை என்று குறிப்பிடலாம்.இதில் மேலும் படிக்கவும் :